Sunday, September 24, 2006

வராக் - வெள்ளித்தாள் - வெஜிடேரியன்?


பல நாட்கள் முன்பு வந்த ஒரு மின் மடலில் படித்த செய்தி இது.

ஆரியபவன் போன்ற இனிப்பு பதார்த்தகடைகளில் வெள்ளித்தாள் போர்த்திய இனிப்புகளைப் பார்க்க முடியும். இந்த வெள்ளித்தாளை வராக் என்று அழைக்கின்றனர். இதன் முக்கிய பயன். 90-95% வெளிச்சத்தை இது பிரதிபலித்துவிடும். ஆதலால் இனிப்புப் பதார்த்தத்தினுள் பல வெளிச்சத்தினால் நிகழக்கூடிய வேதியல் மாற்றங்கள் நிகழாமல் பாதுகாக்கப் படும், கூடுதலாக இனிப்பின் சுவையை இது அதிகப்படுத்துவதாகவும் உள்ளது. இந்த வெள்ளித்தாள் செய்யும் முறை என்னவென்று பலருக்குத் தெரியாமல் இருக்கலாம்.

இது செய்யும் முறை, மாடு, எருது போன்ற உயிரினங்கள் இரைச்சிக்காக கொன்ற கசாப்புக் கடை முதலாளிகள், பயன் படுத்தப்படாத குடல் போன்ற பகுதிகளை இந்த வராக் செய்பவர்களிடன் விற்றுவிடுகின்றனர். இதை அவர்கள் சுத்தம் செய்து சதுரம் சதுரமாக வெட்டி நோட்டுப் புத்தகம் போல் வைத்துக் கொண்டு, அதன் நடுவில் மெல்லிய வெள்ளித்தாளை வைத்து பேக் செய்கின்றனர்.

இந்தத் தாளை இனிப்பின் மீது போர்த்துவதன் முன்பு, உருளைக் கட்டை கொண்டு அடித்து மேலும் மெலிதாக்கு கின்றனர். இந்த அடிக்கு எந்த பொருளும் கிழியாமல் போகாது, மாட்டுக் குடல் தவிர. பால் சம்பந்தப்பட்ட இனிப்புகள், ராஜஸ்தானி, குஜராத்தி இனிப்புகளின் மேல் இதைப் பயன் படுத்துகின்றனர்.

இதை அறிந்தே பல வெஜிடேரியன் என்று தங்களை காட்டிக் கொள்ளும் மக்கள் உண்கின்றனர். ஜெயின் மதத்தவர் முக்கியமாக. மேனகா காந்தி (ஆம், இந்தியாவின் இன்னொரு மருமகள்!!...sorry.. இந்திராவின் !!) முன்பு நடத்திக் கொண்டிருந்த தொலைக்காட்சிப் நிகழ்ச்சியில் (Heads and tails) இதைப் பற்றி கூறியுள்ளார்.