Friday, April 13, 2007

Spiderman STANDS

YNET NEWS எனப்படும் இஸ்ரேலிய நாளிதளில் வந்த செய்திக் குறிப்பு ஒன்றில், இஸ்ரேலில் உள்ள ஹைஃபா ரம்பம் மருத்துவமனையின் டாக்டர் இலியன் க்ருயன்வால்ட் என்பவரின் டீம் sexual health என்ற துறையில் சில சிலந்திகளின் விஷத்தில் ஆண்களுக்கு ஏற்படும் erectile dysfunction எனப்படும் ஆண்மைக் கோளாறுகளை சரி செய்யும் தன்மை உள்ளதாக கண்டுபிடித்துள்ளனர். அதுவும் சில ஆண்கள் சில வகை சிலந்தி கடித்தபின்னர் தங்கள் ஆண் குறி எழுச்சி நீண்ட நேரம் நீடிப்பதாக தெரிவித்ததாகவும் அந்தச் செய்திக் குறிப்பு கூறுகிறது.

Ynet news ன் வலைத்தளத்தில் முழு செய்தி கொடுக்கப்பட்டுள்ளது.



அந்த செய்திக்கு வந்த ஒரு பின்னூட்டம் இங்கே!

Spiderman
Spiderman
Does whatever Viagra can
Gets aroused, supersized
Catches girls, just like flies.

மார்வெல் காமிக்ஸின் ஸ்பைடர் மேன் கார்டூன் title song ன் டியூனில் பாடவும்!

Monday, January 01, 2007

அமார் சொனார் பாங்ளா

"அமர் சொனார் பாங்க்ளா" நம் தங்கமான வங்க தேசம் என்று வங்கதேசத்தைப் போற்றியவர் நோபல் பரிசு பெற்ற ரபீந்த்ரநாத் தாகோர். 1947ல் சுதந்திர இந்தியாவை துண்டாக்கி கிழக்குப் பாகிஸ்தானாக மாற்றப்பட்ட வங்கதேசத்தில் 37% இந்துக்கள் இருந்தனர். இந்துக்கள் எண்ணிக்கையில் வங்கதேசம், இந்தியா, நேபாளத்திற்க்கு அடுத்து மூன்றாவது இடத்தில் இருந்தது.



2006 சென்ஸசின் படி 11% இந்துக்கள் தான் தற்போது இருக்கின்றனர்.
இந்த இன அழிப்புக்குக் காரணம் இஸ்லாமியப் புனிதப் போர் என்னும் ஜிஹாத்.

குடும்பத்தார் கண் முன்னே பெண் பிள்ளைகள் கற்பழிக்கப் படுவது, இந்துப் பெண்களை குறிவைத்துக் கடத்தி கற்பழித்து மதம் மாற்றுவது, கோவிகளை இடிப்பது, என்று திட்டமிட்ட இனப் படுகொலை செய்யும் வங்க தேசம் பற்றியும் அதன் இன்னும் மிச்சமிருக்கும் இந்துக்கள் நிலை பற்றியும் foundation against continuing terrorism என்ற அமைப்பு ஒரு கண்காட்சி நடத்துகிறது. 2006 ல் இது போல் கஷ்மீர் பண்டிட்கள் பற்றி நடத்திய கண்காட்சியின் தாக்கமாக அமேரிக்க பாராளுமன்றத்தில் இந்துக்களுக்கு எதிரான மனித உரிமை மீரல்கள் பற்றி தீர்மானம் நிறைவேற்றியுள்ளார்கள் (H.Con.Res 388).

மேலும் விபரங்களுக்குத் தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி.

FACT
P.O. Box 540892
Houston, TX 77254-0892
Email: contact@factusa.org

செய்தி படித்த இடம்:

Human Rights Congress for Bangladesh Minorities of Dallas/Fortworth

Friday, December 22, 2006

ஹிட்லர் - செய்தொழுகும் வெங்கோலன்

கிம் பேகர் என்ற பத்திரிக்கையாளர் சிக்காகோ ட்ரிபியூனில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார்.

இந்தியர்கள், இந்துக்கள் மேல் படுபயங்கர காழ்ப்பு உள்ளவனால் மட்டுமே அப்படி எழுதியிருக்க முடியும்.


It's not clear why Hitler is popular in some circles. Some experts say it's because of a belief that Indians were the original Aryan race. Others say it's because Hitler used the traditional Hindu good-luck symbol of the swastika, rotating it slightly. Those who believe strongly in the caste system of India also may like Hitler's eugenics and race beliefs.


இந்தியாவில் ஹிட்லர் மிகவும் பாப்புலராம். இருக்கலாம். அதற்கு இந்துக்கள் (முக்கியமாக இந்து அடிப்படைவாதிகள் என்று முத்திரை குத்தப்படுபவர்கள்) தான் காரணமாம். ஹிட்லர் ஸ்வஸ்திகாவை திருடிக் கொண்டதும் அதைத் திருப்பிப் போட்டு இனப்படுகொலையில் ஈடுபட்டதும் தெரிந்தது. அதற்காக இந்துக்கள் ஹிட்லரை விரும்புபவர் அல்லர்.

ஹிட்லரின் ஆரிய இன கோட்பாடு எவ்வாறு இந்தியர்களைத் துண்டாடியது எனன்பது வலைப்பதிவு வரை வந்துவிட்டது. அதை கிழி கிழி என்றும் கிழித்தாகிவிட்டது இன்னும் இந்தியர்கள் அதை நம்பி ஹிட்லரைப் புக்ழ்கின்றனராம். (சில மடையர்கள் இருந்தால் பெரும்பான்மையோர் அப்படி இல்லை). இந்த வெள்ளைத்தோல் நீலக்கண் ஆரியக் கொள்கை இந்தியர்களின் மனவளர்ச்சியை குன்றச்செய்ய வெள்ளைக்கார பிரித்தானியர்கள் போட்ட திட்டம். அதில் இந்தியர்கள் பெருமையாக நினைக்கக் கூடிய எந்த விஷயத்தையும் வெளியாட்களினால் தான் நடந்தது என்ற எண்ணத்தை உருவாக்கவே வகுக்கப் பட்ட கோட்பாடு.

ஹிட்லருக்கு இந்தியர்கள் மேல் பாசம் இருந்ததாக எங்குமே படித்ததில்லை. வாய்ப்பு கிடைத்திருந்தால் யூதர்களைப் போட்டுத்தள்ளியது போல் இந்தியர்களையும் சுத்திகரிப்பு செய்திருப்பான். செய்தான் என்பது வேறு விஷயம். ஹிட்லரின் ஜெர்மனியில் ஜிப்சீக்கள், ரோமா போன்ற இந்திய வம்சாவழி வந்த நாடோடிகள் துரத்தப்பட்டு கொல்லப்பட்டது கிம் பேகர் அறியாமலா இருக்கிறார் ?

வாஜ்பயீ பிரதமாராக இருந்தபோது இந்திய வம்சாவழி நாடோடிகளை "வீட்டிற்கு திரும்புமாரு" அழைப்பும் விடுத்தவர்.

பால்தாக்கரே போன்ற சிலர் ஹிட்லரை புகழ்ந்து சில இடங்களில் பேசியிருக்கிறார் என்பதற்காக ஒட்டு மொத்த இந்துக்களை ஹிட்லரின் அடிவருடிகளாக சித்தரிப்பது கேவலமான விஷயம்.

Those who believe strongly in the caste system of India also may like Hitler's eugenics and race beliefs போன்ற வார்த்தைகள் முட்டாள்களால் மட்டுமே சொல்லமுடியும். சாதி பற்றி என்ன தெரியும் இந்த ஆளுக்கு ?

இந்தியாவின் சாதி போர்துகீசிய casta விலிருந்து வரும் caste சொல்லுக்கு சற்றும் பொருத்தமில்லாதது. இதுபோன்ற அடிப்படை தவறுகளை வெள்ளைக்காரனுக்கு விற்பதால் இந்தியா பற்றிய, மற்றும் இந்திய இந்துக்களைப் பற்றி முக்கியமாக politically active assertive இந்துக்களைப் பற்றி பிரபலமான தவறான அபிப்பிராயத்தை வலுப்பெறச் செய்கிறார்.



In Gujarat, textbooks have praised Hitler's leadership abilities, fascism and the Nazi movement. Until recently, state social studies textbooks have featured chapters on "Hitler, the Supremo" and "Internal Achievements of Nazism." The textbooks have been changed slightly this year but still barely mention the Holocaust.

This is the same state where Hindu-led riots led to the deaths of more than 1,000 Muslims in the spring of 2002. Several investigations blamed the state government, led by a Hindu-right political party, for permitting the riots.


குஜராத்தின் புத்தகத்தில் ஹிட்லரைப் புகழ்கிறதாம். அதற்கும் கோத்ரா கலவரத்திற்கும் தெளிவாக முடிச்சு போடுவதனால் முஸ்லீம்களை நல்லவர்களாக சித்தரிக்க நினைக்கிறார்.

கோத்ராவில் நடந்த விஷயம், அமேரிக்காவிலோ இங்கிலாந்திலோ, கிருத்தவர்களை ரயில் பெட்டியில் வைத்துக் கொழுத்தியிருந்தால் முஸ்லீம்கள் கதி என்னவாகியிருக்கும் ?

சுருக்கமாகச் சொன்னால், ஹிட்லரின் இனவாதக்கொள்கை ஐரோப்பாவின் சிக்கல். அதில் இந்தியர்கள் பங்கு சுத்தமாக இல்லை. யூத வெறுப்பு என்பது ஐரோப்பாவில் பரவலாக ஹிட்லருக்கு முந்தியும் இருந்துவந்துள்ளது இப்போதும் இருக்கிறது. இந்தியாவில் யூதர்கள் மிகவும் கண்ணியமாக சுயமரியாதையுடன் வாழ்கின்றனர். யூதர்களுக்கும் இந்துக்களுக்கும் என்றுமே பிரச்சனையே இருந்ததில்லை.


Hitler's autobiography, "Mein Kampf," flies off the shelves of many bookstores. The Bandra branch of Crossword, a major bookstore chain in the Mumbai area, sells 35 copies a week.


ஹிட்லரின் "மெயின் கெம்ஃப்" எந்த நாட்டில் அதிகம் விற்கிறது ?

Hitler book bestseller

Friday, December 01, 2006

எங்கே ஐலைய்யா ?

2006 செப்டெம்பர் 29 ம் தேதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் ஊர் முன்னிலையில் அவமானப் படுத்தப் பட்டு அதில் 18 வயது பெண்ணை மானபங்கப் படுத்தி வண்புணர்ச்சி செய்திருக்கின்றனர் எல்லாம் ஊர் கூடி நின்று வெடிக்கை பார்த்து கை கொட்டி அந்தக் கொடிய மிருகங்களை உர்ச்சாகப் படுத்தியுள்ளனர். கைர்லாஞ்சி கிராமத்தில் நடந்த இந்த கோர சம்பவம் ஒரு தேசிய அவமானம். இந்த சம்பவம் தேசிய அளவில் பல அலைகளை ஏற்படுத்தியுள்ளது. மஹாராஸ்ஹ்டிரா மாநிலத்தில் பல இடங்களில் அதன் விளைவுகள் தெரிய ஆரம்பித்து விட்டன.

இதன் முக்கிய காரணம், அந்த குடும்பத்தினர் தலித் இனத்தவர்கள்.

இந்த அக்கிரமத்தை அரங்கேற்றியவர்கள் "மேல் சாதி" என்று சொல்லிக் கொள்ளும் OBC க்கள்.

தலித் intellectual சந்திரபன் பிரசாத் இதைப் பற்றி என்ன சொல்கிறார் என்று பார்க்கலாம்.

Return of the Dalit panther


Amid cheers from the Kunbi men, women and children, the mother and daughter were first stripped. While they were being raped for about an hour, the Kunbi elders stood to give the culprits a standing ovation.

Did such things happen in Hitler's regime? In full public view, four people were butchered. This is India's social holocaust, where dominant Kunbis, a listed OBC caste inflicted humiliation while killing.

Atrocities on Dalits follow a pattern, often of a pan-India nature. Most Dalit killings are accompanied by inflicting humiliations. For instance, if the caste society decides to rape a Dalit woman, or target her dignity, attempts are made that more and more people came to know of it. That's the reason a rape is preceded by stripping the victim. Sometimes, there will be no physical injury, only humiliation. The idea is to convey a message - that, Dalits ought to know their social positioning. The Khairlanji medievalism is just one case in point. Such acts of barbarism are common all over India and it is just that this savagery caught the media attention and we are shocked.


OBC க்கள் தலித்துக்கள் மேல் கட்டவிழ்த்துவிடும் வன்முறையை Social holocaust என்று சொல்கிறார்.

ஒரு விதத்தில் இது உண்மையே.

இந்த அதி தீவிர "இந்து எதிர்ப்பு வலைத்தளத்தில்" முக்கியமாக இலங்கை தமிழர்களை எதிர்க்கும் பௌத்த வலைதளத்தில் படங்கள் போட்டிருக்கிறார்கள். படங்கள் கோரமானவை. மன முதிர்ச்சி உடையவர்கள் மட்டுமே பார்க்கவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இது வரை, தலித் விடுதலை என்றெல்லாம் பேசும் அறிவு சீவிகளிடமிருந்து ஒரு பேச்சுகூட இல்லை இதைப் பற்றி.

1. எங்கே, கஞ்சன் ஐலைய்யா ?

2. தலித்-பஹுஜன் (பஹுஜன் என்பது OBC க்களைக் குறிக்கும் சொல்) கூட்டு என்றெல்லாம் பேசிய இந்த அறிவாளி, தலித்-பஹுஜன் இணைந்து பிராமணர்களைக் கேள்வி கேட்கவேண்டும் என்று சொல்லியவர் இப்போது எங்கே ?

3. இந்த குற்றவாளிகளுக்கும் தூக்கு வழங்கக் கூடாது என்று சொல்பவர்கள் நம் அறிவு சீவிக் கூட்டத்தில் இருக்கலாம், தப்பில்லை, இந்தியா ஒரு ஜனநாயக நாடு. ஆனால் இவர்கள் முட்டாள் தனத்தின் அளவு தன் நிகரில்லாக் கீழ் நிலையைத் தொடும் என்றால் அது இவர்கள் பேசும் இது போன்ற பேச்சில் தான். சந்தோஷ் சிங்கிற்கு தூக்கு வழங்குவது பற்றி பேச்சு மூச்சில்லை, ஆனால் அஃப்சலுக்கு என்றவுடன் இவர்கள் கொடி தூக்கியதும், தர்ணா செய்ததும் இதன் அடிப்படையில் பார்க்கையில், இவர்களைப் பார்த்து காரித் துப்பவேண்டும் என்று தோன்றுகின்றது.

4. இது காங்கிரஸ் ஆளும் மஹராஷ்டிரத்தில் நடந்த விஷயம், இதே பா.ஜ.க ஆளும் குஜராத்தில் நடந்திருந்தால் ?

5. எங்கே டீஸ்டா செடல்வாத், ஷபானா ஆஸ்மி மற்றும் இவர்கள் அடி வருடிகளான NGO ராஸ்கல்கள் ?

Saturday, November 25, 2006

வலைப்பதிவுகளில் நக்ஸலைட்கள்

இந்துஸ்தான் டைம்ஸில் வந்த இந்தச் செய்தியில் நக்ஸலைட்டுகள் வலைப்பதிவில் காலூன்றியதால் நக்சலைட்டுகளை ஒடுக்க அமைக்கப் பட்டப் போலீசாரும் வலைப்பதிவு ஒன்றை ஆரம்பித்து internet ல் போர் செய்கிறார்களாம்.

நக்ஸலைட்டுகள் தங்கள் கொள்கையை வலைப்பதிவேற்றி வலையில் பிரச்சாரம் செய்கின்ற அளவுக்குப் போய்விட்டார்கள்.

நக்சலைட்டுகளுடன் கூட்டுச் சேர்ந்து இந்தியாவின் வளர்ச்சியைத் தடுக்க மாவோயிச புரட்சி செய்ய ஆசையிருந்தால் இதோ இந்த வலைத்தளத்திற்குச் செல்லவும். செல்பவர்கள் மீண்டும் இங்கே வரவேண்டாம். நக்சலைட்டுகளின் ஆதரவாளன் என்றால் என் அகராதியில் தலை நசுக்கப் படவேண்டிய நச்சுப் பாம்பு என்றே பொருள்.

போலீசாராலோ அல்லது அனானியாகவோ இயக்கப் படும் இந்த தளம் நக்ஸல் எதிரி தளம்.

இந்த நக்ஸல்வாத இயக்கத்தின் எதிரி தளத்தில் ASHA மற்றும் AID இந்தியா வை குறிவைத்தும் ஒரு சுட்டி இருக்கிறது. IIT ன் முன்னாள் மாணவரான திரு. சந்தீப் பாண்டே படம் போட்டு நக்ஸலைட்டுகளுக்கு உதவுபவர் என்றும் கூறியிருக்கிறார்கள்.

தமிழகத்தில் சூனாமியின் போது இது போல் AID மற்றும் ASHA போன்ற (NGO) எஞ்சி ஓ (எஞ்சியிருக்கும் ஒற்றர்களோ!?) க்களுக்கு பண உதவி செய்திருப்பின் அது நிச்சயம் நக்சலைட்டுகளுக்குச் சென்றிருக்கும் என்பது இவர்களது கூற்று.

Saturday, November 11, 2006

போலிகளிடமிருந்து இடது சாரிகளைக் காப்பாற்றுங்கள்

திண்ணையில் திரு. அருணகிரி எழுதிய இந்த கட்டுரை மிகவும் ஆழமான எண்ணத்தை தூண்டிவிட்டதால் இதனை இங்கே பதிகிறேன்.

இடது சாரி இந்துத்வம்

இதுவரை இந்துத்வா கொள்கை என்பது ஏதோ ஒரு அரசியல் கொள்கை அவ்வளவே என்ற எண்ணத்தில் இருந்தேன். ஆனால் அருணகிரியின் இந்த கட்டுரையின் அர்த்தத்தை நான் சரியாகப் புரிந்து கொண்டுள்ளேன் என்றால் உண்மையான இடது சாரிகள் இடது சாரிகள் என்று தங்களை அடையாளப் படுத்திக் கொள்பவர்களில் இல்லாமல் போய்க் கொண்டிருப்பதாகவே தோன்ற அரம்பித்துவிட்டது.

இடது சாரிகள் என்றாலே கேவலமான ஜந்துக்கள் என்று தான் நினைத்திருந்தேன். ஆனால் அந்த எண்ணம் மாறிவருகிறது. இவர்கள் உண்மையான இடது சாரிகள் அல்லர். சும்மா பதவிக்காக வேஷம் போடும் வெளிவேசக்காரர்கள் என்ற எண்ணம் தோன்ற அரம்பித்துவிட்டது.

உண்மையான இடது சாரிகள் இடது சாரி சிந்தனையை காக்கவேண்டும் என்ற அவசியத்தை திரு. அருணகிரி சொல்லியிருக்கிறார்.


உண்மையான இடதுசாரித்தனத்தை இடதுசாரிகளிடமிருந்து காப்பதும் மீட்பதும் இந்துத்துவத்தின் இன்றைய தலையாய கடமையாகும்.


இந்த நிலைக்கு இந்திய இடது சாரிச் சிந்தனையாளர்கள் செல்ல என்ன காரணம் என்பதை எல்லோரும் அறிவர். இந்த இடது சாரி சிந்தனையை இந்துத்வா சிந்தனையாளர்கள் மீட்பதில் வெற்றியடைந்தாலொழிய போலி இடது சாரிகளுக்கு இன்று இருக்கும் Political space மற்றும் அரசியல் செல்வாக்கை காலி செய்ய முடியாது என்றே தோன்றுகிறது.

Monday, October 16, 2006

செக்குலர் கூத்து

இந்தியாவில் அமேரிக்க Rock இசைக் கலைஞர் Slayer ன் புதிய ஆல்பம் விற்பனையிலிருந்து விலகிக் கொள்ளப் பட்டு இருக்கிறது. காரணம், அந்த ஆல்பத்தின் cover மற்றும் பாடல்கள்.

BBC ல் வந்த செய்தி.
Image Hosted by ImageShack.us

The band's Indian label, EMI Music, recalled stocks of Christ Illusion and had them destroyed.

Joseph Dias, of Mumbai's Catholic Secular Forum, said the album was "offensive and in very bad taste".

It was claimed that songs on the album, including Skeleton Christ and Jihad, offend both Muslims and Christians.

Censored version

The album cover depicts Christ with partially amputated limbs and a missing eye, set in a landscape littered with amputated heads.


A version of the album cover which conceals Christ is also available

EMI India said it withdrew the albums and destroyed them so no community would be offended by the material.

The company added that it had no plans to re-release the record at any time in India.

A censored version of the album cover has been produced, which shields the majority of the Christ-like figure with Slayer's logo.

In May, Indian protests at the film adaptation of The Da Vinci Code resulted in the addition of a disclaimer stating its content was fictitious.



M.F.ஹுசைன் வரைந்த பாரதமாதா, சீதா, துர்கா போன்ற படங்களை திரும்பப் பெறச்சொன்னால் "கருத்துச் சுதந்திரத்திற்கு" எதிரி என்று சொல்வார்கள். கம்மியூனல் பட்டம் கட்டப் படுவார்கள். இது போன்ற விஷயத்தில் அரசு மௌனம் காப்பதும், இதே Dias ஆசாமி, டா விஞ்சி கோட் படத்தினை தடை செய்யச் சொல்லி கூப்பாடு போட்டதும் அரசு விரைந்து வந்து தடை செய்தது. அப்புறம் டிஸ்கி போட்டு வெளியிட்டுவிட்டனர்.

இந்திய செகுலரிஸ்டுகளின் முகத்திரை கிழி கிழி என்று கிழிகிறது. கொஞ்சமேனும் லஜ்ஜை இருப்பின் இனி இந்துக்கள் விஷயத்தில் இதே போல் தங்கள் வாயையும், ___________யும் மூடிக்கொண்டு இருக்கவேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.