Sunday, September 24, 2006

வராக் - வெள்ளித்தாள் - வெஜிடேரியன்?


பல நாட்கள் முன்பு வந்த ஒரு மின் மடலில் படித்த செய்தி இது.

ஆரியபவன் போன்ற இனிப்பு பதார்த்தகடைகளில் வெள்ளித்தாள் போர்த்திய இனிப்புகளைப் பார்க்க முடியும். இந்த வெள்ளித்தாளை வராக் என்று அழைக்கின்றனர். இதன் முக்கிய பயன். 90-95% வெளிச்சத்தை இது பிரதிபலித்துவிடும். ஆதலால் இனிப்புப் பதார்த்தத்தினுள் பல வெளிச்சத்தினால் நிகழக்கூடிய வேதியல் மாற்றங்கள் நிகழாமல் பாதுகாக்கப் படும், கூடுதலாக இனிப்பின் சுவையை இது அதிகப்படுத்துவதாகவும் உள்ளது. இந்த வெள்ளித்தாள் செய்யும் முறை என்னவென்று பலருக்குத் தெரியாமல் இருக்கலாம்.

இது செய்யும் முறை, மாடு, எருது போன்ற உயிரினங்கள் இரைச்சிக்காக கொன்ற கசாப்புக் கடை முதலாளிகள், பயன் படுத்தப்படாத குடல் போன்ற பகுதிகளை இந்த வராக் செய்பவர்களிடன் விற்றுவிடுகின்றனர். இதை அவர்கள் சுத்தம் செய்து சதுரம் சதுரமாக வெட்டி நோட்டுப் புத்தகம் போல் வைத்துக் கொண்டு, அதன் நடுவில் மெல்லிய வெள்ளித்தாளை வைத்து பேக் செய்கின்றனர்.

இந்தத் தாளை இனிப்பின் மீது போர்த்துவதன் முன்பு, உருளைக் கட்டை கொண்டு அடித்து மேலும் மெலிதாக்கு கின்றனர். இந்த அடிக்கு எந்த பொருளும் கிழியாமல் போகாது, மாட்டுக் குடல் தவிர. பால் சம்பந்தப்பட்ட இனிப்புகள், ராஜஸ்தானி, குஜராத்தி இனிப்புகளின் மேல் இதைப் பயன் படுத்துகின்றனர்.

இதை அறிந்தே பல வெஜிடேரியன் என்று தங்களை காட்டிக் கொள்ளும் மக்கள் உண்கின்றனர். ஜெயின் மதத்தவர் முக்கியமாக. மேனகா காந்தி (ஆம், இந்தியாவின் இன்னொரு மருமகள்!!...sorry.. இந்திராவின் !!) முன்பு நடத்திக் கொண்டிருந்த தொலைக்காட்சிப் நிகழ்ச்சியில் (Heads and tails) இதைப் பற்றி கூறியுள்ளார்.

9 comments:

துளசி கோபால் said...

நானும் இதை தயாரிக்கறதை ஒரு டிவி நிகழ்ச்சியில் பார்த்தேன்.
அதைப் பார்த்ததில் இருந்து ஏற்கெனவே இந்தியாவில் இருந்து வாங்கிவந்த
சில்வர் வராக்குகளைப் பயன் படுத்த மனசில்லாமல் அப்படியெ இருக்கு.

சாக்லேட்டிலும் தலைமுடியில் இருந்து என்னமோ எடுத்து சேர்க்கறாங்கன்னு
ஒருமுறை குமுதத்திலோ எங்கியோ படிச்சது முதல் அதுவும் தின்னப் பிடிக்கலை.
அது போகட்டும்,
இந்திரா காந்தி குடும்பத்துலெ எப்போதுமே பேர் குழப்பம் எப்படி 'இயல்பாய்' நடந்துருது?

இவுங்க குடும்பப்பேரு காந்திக்கு ஸ்பெல்லிங் வேற. ஆனா மஹாத்மா காந்திக்கு வர்ற ஸ்பெல்லிங்கெ
இவுங்களுக்கும் (எப்படியோ)வந்தாச்சு.
இப்ப மனேகா காந்தி , மேனகா ஆயிட்டாங்க.
என்னமோ போங்க.

Samudra said...

சாப்பிட கூடாது தான்.
ஆனா ருசியா இருக்கே தல.

செல்வன் said...

பல நாட்கள் முன்னாடியே தெரியும்.முந்தி சர்க்கரையில் கூட நாய் எலும்பை சேர்த்ததாக சொல்லுவார்கள்.ஆனா இதை எல்லாம் கண்டுக்கறதில்லை.வெஜிடேரியன் என்பதன் விரிவுரையை ரொம்ப ஃபனடிகலா பயன்படுத்தக்கூடாது,அப்புறம் போரடிச்சுடும்

Vajra said...

சர்கரையில் நாய் எலும்பு கூட எனக்குப் பிரச்சனையில்லை...மாட்டு இரைச்சிதான் பிரச்சனை என்பவர்கள்?

ஏங்க...எவ்வளவோ ஆராய்ச்சிக்கு பணம் கொட்டுகின்றோம்...கோடிக்கணக்கு வியாபாரம் செய்யக்கூடிய இந்த வராக் தயாரிக்க மாட்டுக் குடல் தவிர வேறு பொருள் ஏன் இன்னும் கண்டுபிடிக்காமல் இருக்கவேண்டும்...? பேடண்ட் செய்தால் பணக்காரனாகும் வாய்ப்பும் உள்ளது..! இரண்டு லட்சம் கிலோ விற்பனையாகிறதாம்..இந்த வராக்...இந்தியாவில் மட்டும்..

நாமக்கல் சிபி said...

இது எனக்கு ரொம்ப நாளைக்கு முன்னாடி மெயிலில் வந்தது.

வழக்கம் போல் hoaxஆக இருக்கும் என விட்டுவிட்டேன் :-(

Vajra said...

//
வழக்கம் போல் hoaxஆக இருக்கும் என விட்டுவிட்டேன் :-(
//

பாலாஜி,

மனேகா காந்தி எல்லாம் சொல்லியிருக்குய்யா...!! உண்மை தான்யா..

அது தான் அடிக்கடி இந்த forward மெயிலெல்லாம் பிரிச்சி பாத்து ரசிக்கக் கூடாது...அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் மாதிரி...மெயிலில் வரும் சமாச்சாரம் எல்லாம் பாதிப் பொய் என்றே யோசிக்கத் தோணும்..!

நாமக்கல் சிபி said...

சங்கர்,

//மனேகா காந்தி எல்லாம் சொல்லியிருக்குய்யா...!! உண்மை தான்யா..//
அதுக்குத்தாம்பா ஃபீல் பண்ணி ":-(" ஸ்மைலி போட்டேன் ;)

//...மெயிலில் வரும் சமாச்சாரம் எல்லாம் பாதிப் பொய் என்றே யோசிக்கத் தோணும்..! //
பாதி இல்ல... இந்த மாதிரி வர விஷயங்கள் எல்லாமே பொய்னு தோனும் :)

Hariharan # 26491540 said...

ஷங்கர்,

வெள்ளித்தாள் தயாரிப்பு மட்டுமல்ல
இன்னும் பல ரெடி டூ ஈட் உணவுகள் மோசடி வெஜிடேரியன்கள்தாம்.

இந்த மோசடி வெஜிடேரியன் உணவுத் தயாரிப்பு பற்றி தனிப்பதிவாக இட்டிருக்கிறேன் எனது வலைப்பூவில்.

அன்புடன்,

ஹரிஹரன்

delphine said...

உண்மைகள் கசக்கும்..'சீ,,சீ இந்த பழம் புளிக்கும்..