Monday, October 16, 2006

செக்குலர் கூத்து

இந்தியாவில் அமேரிக்க Rock இசைக் கலைஞர் Slayer ன் புதிய ஆல்பம் விற்பனையிலிருந்து விலகிக் கொள்ளப் பட்டு இருக்கிறது. காரணம், அந்த ஆல்பத்தின் cover மற்றும் பாடல்கள்.

BBC ல் வந்த செய்தி.
Image Hosted by ImageShack.us

The band's Indian label, EMI Music, recalled stocks of Christ Illusion and had them destroyed.

Joseph Dias, of Mumbai's Catholic Secular Forum, said the album was "offensive and in very bad taste".

It was claimed that songs on the album, including Skeleton Christ and Jihad, offend both Muslims and Christians.

Censored version

The album cover depicts Christ with partially amputated limbs and a missing eye, set in a landscape littered with amputated heads.


A version of the album cover which conceals Christ is also available

EMI India said it withdrew the albums and destroyed them so no community would be offended by the material.

The company added that it had no plans to re-release the record at any time in India.

A censored version of the album cover has been produced, which shields the majority of the Christ-like figure with Slayer's logo.

In May, Indian protests at the film adaptation of The Da Vinci Code resulted in the addition of a disclaimer stating its content was fictitious.



M.F.ஹுசைன் வரைந்த பாரதமாதா, சீதா, துர்கா போன்ற படங்களை திரும்பப் பெறச்சொன்னால் "கருத்துச் சுதந்திரத்திற்கு" எதிரி என்று சொல்வார்கள். கம்மியூனல் பட்டம் கட்டப் படுவார்கள். இது போன்ற விஷயத்தில் அரசு மௌனம் காப்பதும், இதே Dias ஆசாமி, டா விஞ்சி கோட் படத்தினை தடை செய்யச் சொல்லி கூப்பாடு போட்டதும் அரசு விரைந்து வந்து தடை செய்தது. அப்புறம் டிஸ்கி போட்டு வெளியிட்டுவிட்டனர்.

இந்திய செகுலரிஸ்டுகளின் முகத்திரை கிழி கிழி என்று கிழிகிறது. கொஞ்சமேனும் லஜ்ஜை இருப்பின் இனி இந்துக்கள் விஷயத்தில் இதே போல் தங்கள் வாயையும், ___________யும் மூடிக்கொண்டு இருக்கவேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.

Saturday, October 14, 2006

தீபாவளி Fatwa

மலேசியா (truly asia!) வில் சிறுபான்மையின இந்துக்கள் தீபாவளி பண்டிகைக்கு இஸ்லாமியர் தீபாவளி வாழ்த்து தெரிவித்தல் இஸ்லாமுக்கு எதிரானது என்று Fauzi mustaffar என்ற மலேசிய அரசு ஷரியா சட்டதிட்ட கிளை தலைவர் ஒரு e-mail அனுப்பிய்ருக்கிறார்.

இந்த விஷயம் வெளியில் தெரிந்துவிட்டது.

உடனே, மலேசிய அரசு இது முஸ்தப்பரின் தனிப்பட்ட கண்ணோட்டம் என்று விலகி நிற்கிறது.



Fauzi Mustaffar, head of Shariah department, in an email directive to office staff has said that Diwali was a religious festival in which Hindu deities were worshipped and greeting Hindus on the occasion was like practising polytheism to Muslims.

"So Muslims who have inadvertently wished Hindus a Happy Diwali, Happy Durga Pooja or Happy Lakshmi Pooja must immediately repent and not repeat it in the future," Fauzi said in his e-mail, according to The Star daily.

Government distanced itself from the controversial directive. Abdullah Zin, a minister in Prime Minister Abdullah Badawi's Department, said the email sent by Mustaffar was his "personal view," according to the daily.

"He (Mustaffar) has no authority to say Muslims shouldn't wish Hindus because that is like a fatwa (edict). And fatwas can only come from the National Fatwa Council and Jakim," Zin was quoted as saying.

"Just because you wish someone Happy Diwali does not mean that you have embraced his beliefs and religion. It is not syirik (practising polytheism). In a multi-religious and multi-racial country like ours, it is important to live in harmony and be nice to one another," the minister said.

Fauzi when contacted said the email was in response to employees enquiries and meant only for internal circulation.


இத்தனையும் செய்துவிட்டு முஸ்தப்பர் சொல்லும் விஷயம் என்னவென்றால் அந்த மின் மடல் internal circulation க்கு மட்டும் தானாம்.

இதில் எழும் கேள்விகள் என்னவென்றால்,

1. ஷரியா சட்டத்தின் படி இந்துக்கள் பண்டிகைக்கு இஸ்லாமியர் வாழ்த்து தெரிவிக்கக் கூடாதா?

2. இந்துக்கள் மட்டும் ஏன் மாங்கா மடையர்கள் போல், ஈத் முபாரக், ரம்ஜான் வாழ்த்துக்கள், என்றெல்லாம் சொல்லவேண்டும்?

3. மலேசிய அரசு விலகி நின்றாலும் இந்த விஷயம் வெளியில் தெரியாமல் இருந்திருந்தால்?

இப்படி ஒரு அரசு இயந்திரத்தில் தலைவராகப் பணி செய்பவர் e-mail fatwa விடுகிறார் என்றால், அவர்களுடைய "மத-நல்லிணக்கம்" எத்தகயது என்பதை எண்ணிப்பார்க்க முடிகிறது.

மலேசிய அரசு ஒன்றும் தங்களை மதச்சார்பற்ற அரசாக அறிவித்துக் கொள்ளவில்லை. இருந்தபோதிலும் மலேசியா தான் இஸ்லாமிய நாடுகளிலேயே கொஞ்சமேனும் மத நல்லிணக்கம் காட்டி வந்திருக்கிறது. துருக்கி அடுத்ததாக.

இதே தீபாவளியை வைத்து இன்னுமொறு செய்தி படித்தேன்.

நேற்று வரை இந்து நாடாக இருந்த நேபாளத்தில் தீபாவளிக்கு பட்டாசுகள் வெடிக்கத் தடை விதித்துள்ளது.

ஆட்சியில் இருப்பது இடது சாரிக்கூட்டம். அவர்கள் சொல்லும் காரணத்தில் ஞாயம் கிஞ்சித்தும் இல்லை. பாதுகாப்பு காரணம் சொல்லப் படுகின்றது. அதற்கு ஆட்சியில் அமர்ந்து கொண்டு சட்டம் போடுவதை விடுத்து ஆஸ்பத்திரிகள் பல கட்டி அடிப்படை கட்டமைப்பை மேம்படுத்தவேண்டியது தானே.

இவர்களைச் சொல்லிக் குற்றமில்லை. நேபாளத்தில் இருந்துகொண்டு தன் நாட்டிற்கே துரோகம் செய்து ஆட்சியைப் பிடித்தவர்கள் தானே இவர்கள்.

இந்த கேவலத்துக்கு நம் மத்தியில் உலாவும் செஞ்சட்டைக்காரர்களின் ஆதரவு வேறு. "மகாராஜாவை மரியாதை"யுடன் வீட்டிற்கு அனுப்பிய இவர்கள் மக்களாட்சிக்கு கொடுக்கும் மரியாதை இவ்வளவு தானா?

Saturday, October 07, 2006

ஐ நா சபை பாதுகாப்பு கவுன்சிலில் வெனிசூலா- CPI (M)

கம்யூனிஸ்ட் பார்டி வலையிதளான People's Democracy ல் ஐ. நா பாதுகாப்பு கவுன்சிலில் வெனிசூலா வுக்காக இந்திய அரசு வாக்கு பதியவேண்டும் என்று சொல்லியிருக்கிறது.


The UPA government should make a categorical announcement that it backs Venezuela for the Security Council seat. The best time to do this would be during the prime minister’s visit to Brazil and Cuba.


இந்த பாதுகாப்பு சபைக்கன வாக்கெடுப்பு இந்த அக்டோபர் மாதம் நடைபெற உள்ளது.

இதில் ஒன்றும் சொல்வதற்கு இல்லை. இவர்கள் கொள்கைக்கு செய்யும் கடமையில் 100 ல் 1 பங்கேனும் நாட்டிற்குச் செய்தால் நன்மை உண்டாகும்.

தலீத் - மதமாற்றம்

கேந்திரபாதா என்னும் ஊரில் உள்ள சுமித்ரா என்ற பெண் தனது மாமனார் மற்றும் கணவர் தான் இந்து கடவுள்களை வழி பட தடுக்கின்றனர். கிருத்துவாக மாற கட்டாயப் படுத்துகின்றனர் என்று போலீசில் புகார் கொடுத்துள்ளதாக டைம்ஸ் ஆப் இந்தியா செய்தியில் வந்துள்ளது.


"My husband and father-in-law pressurised me to change my religion. Last week they assaulted me when I again refused to convert, so I left my husband's house," she said.


இப்படிப் பட்ட மத மாற்றத்தை கட்டாய மத மாற்றம் என்று சொல்லாமல் வெறு என்ன சொல்வது.


"I am ready to die. But I will not change my religion," Sumitra added. Sumitra's marriage last year was not a happy event. A resident of Arunanagar village, near Kendrapada, she was allegedly raped by Padia Das in June 2005.


மதம் மாறுவதற்கு பதில் செத்துப் போய் விடுவேன் என்று சொல்லும் அளவிற்கு கட்டாயப் படுத்தப்பட்டிருக்குறாள் அந்தப் பெண்.

இந்த 19 வயது தலீத்துக்கு இருக்கும் சுய மரியாதை கூட இல்லாத ஜந்துக்கள் படித்துவிட்டு உலக ஞாயம் பேச வந்துவிடுகிறார்கள்.

இதெல்லாம் திரு. கஞ்சன் ஐலையா போன்ற தலீத் "பெருமகனாருக்கு"த் தெரியாமல் இருக்காது...அவர் தான் " நான் ஏன் இந்து அல்ல" என்று புத்தகம் எழுதி பெருமை தேடிக்கொண்டவராச்சே..! அவர் இதற்கெல்லாம் வருவாரா?

Monday, October 02, 2006

தலீத் தன்னிறைவு

உ.பி மானிலம், பராபங்கி என்னும் இடத்தில் தலீத்கள் மேல் சாதி பிராமணர்கள் தொந்தரவு தாங்காமல் அவர்களிடமிருந்து விலகி தாங்கள் முக்கிய சடங்குகளான திருமணம் திதி போன்றவற்றை தங்களுள் படித்தவர்களைவைத்து முடித்துக் கொண்டு விடுகின்றனர் என்று ஹிந்துஸ்தான் டைம்ஸில் செய்தி வெளியாகியிருக்கிறது.


In dozens of villages across the state, Dalits have stopped depending on Brahmin priests for weddings, funerals and other ceremonies. Instead, they have turned to a Buddhism-inspired book which has rituals that can be performed by any literate person. The wide use of the Bhim Patra, named after Bhimrao Ambedkar, is part of a quiet rebellion against upper-caste domination.

"We have nothing to do with the Brahmin pandits," said Chhabi Lal of Ghunghter village, 45 km from Lucknow. "They tell us, 'Your parents died; so to make their souls happy, give us a bed and a cow as gifts.' As if it is all going to reach them."


பிராமணர்களிடம் சாஸ்திர சம்பிரதாயம் கடைபிடித்து திருமணம், சடங்குகள் செய்வதைவிடுத்து அம்பேத்கார் ஆரம்பித்து வைத்த பீம்-பத்ர எனப்படும் புத்தகத்தில் கூறியபடி திருமணங்கள் நடத்திக் கொள்கின்றனர். இன்னும், அங்கே இருக்கும் பிராமணர்கள் திருந்தாமல் செய்தியில் சொல்லியிருப்பது போல் மூடத்தனமாக "உங்கப்பன் செத்துட்டான், எனக்கு மாடு குடு, ஆடு குடு" என்று கேட்டுக் கொண்டிருப்பதனால் தான் இந்த நிலை.




"We are all Hindus; we have not converted," said Mohan Lal Gautam, who sells books at a traffic intersection at Hazratgunj in Lucknow. "But we have stopped following the old rituals. We follow the Bhim Patra. There is no pandit, no worship of gods and goddesses, no dowry and no auspicious time for any wedding."

Amar Pal Bharti of Jyotiba Phule Nagar district said: "This is the result of our anger against the system. What do we have to do with the gods? Why worship someone we have not seen?"

Priests are feeling the heat. "Dalits have mostly stopped coming to us. They conduct their own ceremonies," said Jagdamba Prasad Bajpai, a priest at Deora village, Lucknow.


இதில் சந்தோஷமான விஷயம் என்னவென்றால், தலீத்கள் ஒரு சாதி வெறி பிடித்த பிராமணன் இருந்த இடத்தை வெளி நாட்டு மூளைச் சலவை செய்யப்பட்ட உள் நாட்டு மதப் போதகர்களை அமர்த்தி, கிருத்தவம், இஸ்லாம் என்று மத்திய கிழக்கு மதத்துக்குத் தாவாமல், இந்துவாகவே இருந்து சாதிக்கின்றனர் என்பது தான்.

Sunday, October 01, 2006

Beijing ல் மழை, தில்லியில் குடை

நம் காம்ரேடுகள் மாறிவருகின்றனர் என்று எண்ணியிருந்தேன். என் எண்ணத்தில் இப்படி மண் அள்ளிப் போடுவார்கள் என்று சற்றும் நினைக்கவில்லை. பழய குருடி, கதவைத் திரடி கதையாய், சீன கம்பெனிகளுக்கு ப்ரோக்கர் வேலை செய்ய ஆரம்பிக்கின்றனர்.

கதை என்னவென்றால்.

சீன டெலிகாம் கம்பெனிகள் இந்தியாவில் முதலீடு செய்வதை இந்தியா பாதுகாப்பு கருதி அனுமதிக்கவில்லை. இதை இடது சாரிக் கட்சி எதிர்த்து, இந்திய கம்பெனிகள் சீனாவில் முதலீடு செய்யும் போது சீனக் கம்பெனிகள் இந்தியாவில் முதலீடு செய்வதை ஏன் தடுக்கவேண்டும் என்று.

நல்ல கேள்வி தான், ஞாயமான கேள்வி தான். ஆனால் தடுத்து நிறுத்தப்பட்டது எந்த கம்பெனி?

நிறுவனத்தின் பெயர் Huawei

இந்த தகவல் தொலைத் தொடர்பு நிறுவனம் எத்தகயது என்பது பற்றி,

Revolution in Millitary affairs என்ற சொல்லாடல் அமேரிக்கா முதல் வளைகுடா யுத்தத்தில் கையாண்டது. அப்போது கொண்டுவரப்பட்ட தொழில் நுட்பம் தான் அது. அதில் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் ஆர்மியுடன் கூட்டமைத்து ஆர்மியை மேம்படுத்தவும், கம்ப்யூடரைஸ் செய்யவும் அடுத்தகட்டமாக தகவல் பரிமாற்றத்தை துரித கதியில் செலுத்தவும் செய்யப்படும் தொழில் நுட்ப மாற்றமே.

சீனா அதன் படைகளை இது போல் புதிய பரிணாமத்தில் கொண்டு செல்ல முயற்சித்து வருகின்றது. இதனால் digital triangle என்று ஒன்று அமைத்து இதில் அரசு ஆராய்ச்சிக் கழகங்கள், தகவல் தொழில்னுட்ப நிறுவனங்கள், மற்றும் மில்லிடரி யை ஒரு குடைக்குள் கொண்டு வந்து தகவல் தொழில் நுட்பப் புரட்சி செய்திருக்கிறது. ஆப்டிகல் பைபர் கேபிள் மூலமும், மைக்ரோவேவ் மூலமும் தகவல் பரிமாற்றம் செய்வதை சீன மில்லிடரி ஏற்கனவே இதன் மூலம் பெற்றுவிட்டது.

Huawei என்ற நிறுவனம் முன்னாள் People's Liberation Army யில் இருந்த அதிகாரி ஒருவரால் ஆரம்பிக்கப் பட்ட நிறுவனம். சில ஆண்டுகள் முன்பு இன்னிறுவனம் $10 மில்லியன் கடன் அரசு வங்கியிலிருந்து பெற்றிருக்கிறது. சீன தூதுவர் சன் யூக்ஸி சீன கம்பெனி ஹுவேய்க்கு சம அந்தஸ்து கொடுத்து இந்தியாவிற்குள் அனுமதிக்குமாறு CPI M யிடம் கேட்டுக் கொண்டுள்ளார். இதனால் நமது காம்ரேடுகள் இந்தியா பாதுகாப்பு காரணமாக சீன நிறுவனத்தை அனுமதிக்காது இருப்பதை எதிர்த்து போர் கொடி தூக்கியுள்ளனர்.

இந்தியாவில் மட்டுமே இந்த சீன நிறுவனங்களுக்கு level playing field கொடுப்பது தடை செய்யப் படவில்லை. அமேரிக்கா, வியத்னாம், ஜப்பான், தென் கொரியா, எல்லோரும் இந்த நிறுவனம் சீன மில்லிடரியில் அங்கம் வகிக்கும் நிறுவனம் என்று சந்தேகப் படுகின்றனர். அதனால் இன்னிருவனத்திற்கு ஒரு level playing filed கொடுக்கவில்லை.

1962 ல் சீனா இந்தியாமீது படை எடுத்த நாடு. இந்தியாவின் strategic security க்கு முதல் எதிரி சீனா. பாகிஸ்தானுக்கு ரகசியமாக அனு ஆயுதம் வழங்கியது முதல், கஷ்மீரில் சட்டவிரோதமாக சில பகுதிகளை ஆக்கிரமித்துள்ளது வரை சீனா தன் Geopolitical purview வை விரிவாக்கிக் கொண்டு செல்கிறது.

வங்கதேசத்தில் நிலவும் ஏழ்மை நிலையைப் பயன் படுத்தியும், இலங்கையில் நடக்கும் இனவாதத்தைப் பயன் படுத்தியும், நேபாள மாவோவாதிகள் புரட்சியைப் பயன் படுத்தியும் சீனா இந்தியாவின் வளர்ச்சியை தடுக்கின்றது. இத்தகய நிலையில் சீன கம்பெனிகள், அதுவும் சந்தேகத்திற்கு உட்பட்ட நிறுவனங்கள் இந்தியாவிற்குள் அனுமதித்து தன் தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொள்ளவேண்டுமா?

இதெல்லாம் அறியாதவர்களா நம் காம்ரேடுகள்...?

என்ன சொல்ல,

இன்றும், 1962ல் நடந்த சீனப் படை எடுப்பிற்கு நேரு தான் காரணம் என்று சொல்பவர்கள் இவர்கள் என்பதை நினைத்தாம் வேதனையாக இருக்கிறது.

இதைத்தான் Beijing ல் மழை பெய்தால் தில்லியில் குடை பிடிக்கும் கேசுகள் என்று சொல்கிறேன்.

Related news articles:

1. BSNL Portal
2. Indian Express
3. India Reacts