Sunday, October 01, 2006

Beijing ல் மழை, தில்லியில் குடை

நம் காம்ரேடுகள் மாறிவருகின்றனர் என்று எண்ணியிருந்தேன். என் எண்ணத்தில் இப்படி மண் அள்ளிப் போடுவார்கள் என்று சற்றும் நினைக்கவில்லை. பழய குருடி, கதவைத் திரடி கதையாய், சீன கம்பெனிகளுக்கு ப்ரோக்கர் வேலை செய்ய ஆரம்பிக்கின்றனர்.

கதை என்னவென்றால்.

சீன டெலிகாம் கம்பெனிகள் இந்தியாவில் முதலீடு செய்வதை இந்தியா பாதுகாப்பு கருதி அனுமதிக்கவில்லை. இதை இடது சாரிக் கட்சி எதிர்த்து, இந்திய கம்பெனிகள் சீனாவில் முதலீடு செய்யும் போது சீனக் கம்பெனிகள் இந்தியாவில் முதலீடு செய்வதை ஏன் தடுக்கவேண்டும் என்று.

நல்ல கேள்வி தான், ஞாயமான கேள்வி தான். ஆனால் தடுத்து நிறுத்தப்பட்டது எந்த கம்பெனி?

நிறுவனத்தின் பெயர் Huawei

இந்த தகவல் தொலைத் தொடர்பு நிறுவனம் எத்தகயது என்பது பற்றி,

Revolution in Millitary affairs என்ற சொல்லாடல் அமேரிக்கா முதல் வளைகுடா யுத்தத்தில் கையாண்டது. அப்போது கொண்டுவரப்பட்ட தொழில் நுட்பம் தான் அது. அதில் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் ஆர்மியுடன் கூட்டமைத்து ஆர்மியை மேம்படுத்தவும், கம்ப்யூடரைஸ் செய்யவும் அடுத்தகட்டமாக தகவல் பரிமாற்றத்தை துரித கதியில் செலுத்தவும் செய்யப்படும் தொழில் நுட்ப மாற்றமே.

சீனா அதன் படைகளை இது போல் புதிய பரிணாமத்தில் கொண்டு செல்ல முயற்சித்து வருகின்றது. இதனால் digital triangle என்று ஒன்று அமைத்து இதில் அரசு ஆராய்ச்சிக் கழகங்கள், தகவல் தொழில்னுட்ப நிறுவனங்கள், மற்றும் மில்லிடரி யை ஒரு குடைக்குள் கொண்டு வந்து தகவல் தொழில் நுட்பப் புரட்சி செய்திருக்கிறது. ஆப்டிகல் பைபர் கேபிள் மூலமும், மைக்ரோவேவ் மூலமும் தகவல் பரிமாற்றம் செய்வதை சீன மில்லிடரி ஏற்கனவே இதன் மூலம் பெற்றுவிட்டது.

Huawei என்ற நிறுவனம் முன்னாள் People's Liberation Army யில் இருந்த அதிகாரி ஒருவரால் ஆரம்பிக்கப் பட்ட நிறுவனம். சில ஆண்டுகள் முன்பு இன்னிறுவனம் $10 மில்லியன் கடன் அரசு வங்கியிலிருந்து பெற்றிருக்கிறது. சீன தூதுவர் சன் யூக்ஸி சீன கம்பெனி ஹுவேய்க்கு சம அந்தஸ்து கொடுத்து இந்தியாவிற்குள் அனுமதிக்குமாறு CPI M யிடம் கேட்டுக் கொண்டுள்ளார். இதனால் நமது காம்ரேடுகள் இந்தியா பாதுகாப்பு காரணமாக சீன நிறுவனத்தை அனுமதிக்காது இருப்பதை எதிர்த்து போர் கொடி தூக்கியுள்ளனர்.

இந்தியாவில் மட்டுமே இந்த சீன நிறுவனங்களுக்கு level playing field கொடுப்பது தடை செய்யப் படவில்லை. அமேரிக்கா, வியத்னாம், ஜப்பான், தென் கொரியா, எல்லோரும் இந்த நிறுவனம் சீன மில்லிடரியில் அங்கம் வகிக்கும் நிறுவனம் என்று சந்தேகப் படுகின்றனர். அதனால் இன்னிருவனத்திற்கு ஒரு level playing filed கொடுக்கவில்லை.

1962 ல் சீனா இந்தியாமீது படை எடுத்த நாடு. இந்தியாவின் strategic security க்கு முதல் எதிரி சீனா. பாகிஸ்தானுக்கு ரகசியமாக அனு ஆயுதம் வழங்கியது முதல், கஷ்மீரில் சட்டவிரோதமாக சில பகுதிகளை ஆக்கிரமித்துள்ளது வரை சீனா தன் Geopolitical purview வை விரிவாக்கிக் கொண்டு செல்கிறது.

வங்கதேசத்தில் நிலவும் ஏழ்மை நிலையைப் பயன் படுத்தியும், இலங்கையில் நடக்கும் இனவாதத்தைப் பயன் படுத்தியும், நேபாள மாவோவாதிகள் புரட்சியைப் பயன் படுத்தியும் சீனா இந்தியாவின் வளர்ச்சியை தடுக்கின்றது. இத்தகய நிலையில் சீன கம்பெனிகள், அதுவும் சந்தேகத்திற்கு உட்பட்ட நிறுவனங்கள் இந்தியாவிற்குள் அனுமதித்து தன் தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொள்ளவேண்டுமா?

இதெல்லாம் அறியாதவர்களா நம் காம்ரேடுகள்...?

என்ன சொல்ல,

இன்றும், 1962ல் நடந்த சீனப் படை எடுப்பிற்கு நேரு தான் காரணம் என்று சொல்பவர்கள் இவர்கள் என்பதை நினைத்தாம் வேதனையாக இருக்கிறது.

இதைத்தான் Beijing ல் மழை பெய்தால் தில்லியில் குடை பிடிக்கும் கேசுகள் என்று சொல்கிறேன்.

Related news articles:

1. BSNL Portal
2. Indian Express
3. India Reacts

13 comments:

dondu(#4800161) said...

1962 வரை கம்யூனிஸ்டு கட்சி ஒன்றாகத்தான் இருந்தது. சீனா யுத்தத்தில் அதை ஒப்புக்காவது கண்டிக்க வேணும்னு ஒரு கோஷ்டி கூற, அதுக்கூட கூடாதுன்னு இன்னொரு கோஷ்டி சொல்ல கட்சி ரெண்டா உடைந்தது. முதலில் குறிப்பிட்டது CPI இரண்டாவதாகக் குறிப்பிட்டது CPI(M). அம்புட்டுதேன்.

ஆனால் அவை கூட உண்மையான கம்யூனிஸ்டுகள் இல்லை, ஏன்னாக்க பார்லிமெண்ட் ஜனநாயக முறையை அவை ஆதரிக்கின்றனவாம். அப்படின்னு சிலர் அசுரத்தனமாக எழுதறாங்க.

70 வருடங்கள் ஆட்டம் போட்டு லட்சக்கணக்கான பேரை கொன்னதெல்லாம் போதாதது போல இன்னொரு சான்ஸ் வேறே இந்த சிந்தாத்தத்துக்குத் தரணுமாம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Vajra said...

வாங்க டோண்டு சார்,

//
ஆனால் அவை கூட உண்மையான கம்யூனிஸ்டுகள் இல்லை, ஏன்னாக்க பார்லிமெண்ட் ஜனநாயக முறையை அவை ஆதரிக்கின்றனவாம். அப்படின்னு சிலர் அசுரத்தனமாக எழுதறாங்க.
//

ஆம், பார்லிமெண்டரி ஜனநாயகத்தை எதிர்க்கவேண்டும், சர்வாதிகாரிகளை ஆதரிக்கவேண்டும்...என்னே லிபரல் சிந்தனை!

என் உள் மன எண்ணம், கம்யூனிசக் கொள்கையை சட்டவிரோதம் ஆக்கவேண்டும் என்பது தான். பிறகு, இந்தியாவின் பெயரில் வலுக்கட்டாயமாகத் திணிக்கப்பட்ட சோசியலிசம் என்பதை தூக்கி கடாசிவிடவேண்டும். கேபிடலிஸ்ட் என்று அதற்கு பதிலாகப் போட்டால் கூட பரவாஇல்லை.

அமேரிக்காவில் ஒரு வரை நீங்கள் கம்யூனிஸ்ட் என்று சொல்வது மிகவும் கேவலமாகத் திட்டுவதாகும். அப்படி சொல்லப் பட்டவருடன் யாரும் வியாபாரம் கூட செய்ய மாட்டார்களாம்...!!

bala said...

இந்த திராவிட கட்சிகளை விட மிக மோசமான அரசியல் செய்யும் கட்சி CPM.

சீனா விலிருந்து சில எலும்புத் துண்டங்களை பொறுக்கு வதற்க்காக இவர்கள் பெற்ற தாயயையும்,மகளையும்,மனைவியையும் விற்க துணியும் மோசமான பிண்டங்கள்.

பாலா

Vajra said...

ஆம் பாலா அவர்களே,

அது தான் வேதனை அளிக்கும் உண்மை.

செல்வன் said...

It's a shame that commies engage in such unpatriotic activities.Let's hope that rational minds in communist parties prevail overt the fundamentalistic ones

Vajra said...

//
Let's hope that rational minds in communist parties prevail overt the fundamentalistic ones
//

If it is rational it is no longer commie. ( i am talking about the mind!)

the blogger hariharan once said,

20 வயதில் ஒருவன் கம்யூனிஸ்டாக இல்லைஎன்றா அவன் இதயமே இல்லாதவன். அதற்கு மேலும் அவன் கம்யூனிஸ்டாக இருந்தால் அவன் மூளையே இல்லாதவன்...!!

நாமக்கல் சிபி said...

சங்கர்,
நீங்கள் சொல்லும் நிறுவனம் பெங்களூரில் இருக்கிறது. அதில் வேலை கிடைப்பது அவ்வளவு சுலபமல்ல... துவக்க சம்பளம் Microsoftஐ விட அதிகம் ;)

நீங்கள் சொல்லும் மற்ற விஷயங்களை பற்றி எனக்கு ஞானமில்லை :-(

சுவாமி said...

வஜ்ரா,
Huawei அமெரிக்காவில் தடை செய்யப்பட்ட நிறுவனமா? தவறான தகவல் என நினக்கிறேன். திருத்தி விடுங்கள்.

திருவடியான் said...

Huwawei கம்பெனி, நெட்வொர்க்கிங் மற்றும் டெலிகாம் உபகரணங்கள் தயாரிக்கும் நிறுவனம். இன்றைய சூழலில் அவர்களது மென்பொருள் ஆய்வுக் கூடம் ஒன்று பெங்களுரில் உள்ளது. ஏராளமான சீன மற்றும் இந்திய பொறியாளர்கள் அங்கு பணி புரிகின்றனர்.

தற்போது பிரச்னை என்ன வெனில், தகவல் தொழில் மற்றும் தொலைத் தொடர்புத் துறையின் தாராளமயமாக்கலில் சீனக் கம்பெனிகளுக்கு இடம் தரவில்லை என்பது தான். இத்துறை மிகவும் சென்சிட்டிவ்வான துறையாகும்.

சிங்கப்பூர், அமெரிக்க, ஐரோப்பிய கம்பெனிகள் எல்லாம் தொலைத் தொடர்புத் துறையில் இந்தியாவில் கால் வைக்கும் போது நம் நாட்டின் இறையாண்மைக்கு குந்தகம் வராதா என்று யாரும் சிந்திக்கவில்லை.

மைக்ரோசாப்ட் மென் பொருள்கள் சீனாவின் அரசு அலுவலகங்களில் நுழைய முடியவில்லை.

சீனாவின் தயாரிப்பான லெனோவா கம்ப்யூட்டர்கள் அமெரிக்க இராணுவ அலுவலகங்களில் விற்க முடியவில்லை.

இஸ்ரேலின் மென்பொருள்கள் அரேபியக் கம்பெனிகளிலும் முஸ்லிம் நாடுகளிலும் விற்க முடியவில்லை.

அந்த வகையில், சீனாவின் தொலைத் தொடர்பு நிறுவனம் இந்தியாவில் கால் பதிக்க முடியவில்லை. அவ்வளவுதான்.

மற்றபடி கம்யூனிஸ்டுகள் கத்துகிறார்கள் என்பது அவர்களின் உரிமை. ஒரு ஜனநாயக நாட்டில் இதற்குக் கூடவா உரிமையில்லை.

ரிலாக்ஸ் ப்ளீஸ்,


கணிணி உலகில் ஒரு நகைச்சுவை அடிக்கடி நினைவு கூறப்படும். CISCO- வில் ஒரு Bug வந்தால் அது நிச்சயம் Huwawei-விலும் இருக்கும் என்பது. காரணம் அமெரிக்காவின் CISCO IOS-வை அப்படியே வரிக்கு வரி காப்பியடித்து அந்த நிறுவனம் வளர்ந்திருக்கிறது என்பது தான். காலப்போக்கில் CISCO-விற்கு மாற்று இல்லாமல் போனதால் வெறுத்துப் போன வெறுப்பாளர்கள் இந்த நிறுவனத்தை வளர்த்து விட்டனர்.

Vajra said...

திருவடியான்,

திருவடியான், நீங்கள் சொல்வது சரி,

தகவல் தொழில் நுட்பம் துரையில் தாராளமயமாக்கல் கொள்கை கடைபிடிப்பதினால் சீன நிறுவனத்திற்கு மற்ற நிறுவனங்கள் போல் அதே அளவு இடம் கொடுத்திருக்க வேண்டும் என்பது தான் bone of contention கம்யூனிஸ்டுகளுக்கு.

Wait a minute,

தாராளமயமாக்கல் என்பதே கொள்கைக்கு விரோதமாச்சே...?

அதை விடுங்கள், சீன நிறுவனத்தினை பாதுகாப்பு கருதி இந்திய அரசு level playing field தராமல் இருக்கிறது. அதைத் தான் நம் காம்ரேடுகள் எதிர்க்கின்றனர். சீனாவுக்கு ஒன்று என்றால் இவர்களுக்கு ஏன் பொத்துக் கொண்டு வருகின்றது?

தென்ன மரத்துல தேள் கொட்டினா, பன மரத்துல நெறி கட்டுறாமாதிரி!!

Samudra said...

CPI (M) என்றோ சீனாவின் கைகூலி ஆகிவிட்டது என்பது தான் உன்மை.

ஜப்பானுடன் இந்திய உறவுகளை மேம்படுத்துகிறது என்றவுடன் இவர்களின் தொழிற்சங்கங்களை தூண்டி இந்தியாவில் இருக்கும் ஜப்பானிய நிறுவனங்களான ஹோண்டா மற்றும் டொயோடா நிறுவனங்களில் கலாட்டா செய்தார்கள்.

Vajra said...

swami மற்றும் வெட்டிப்பயல்,

நன்றி,

திருத்திவிட்டேன்...ஹுவேய் நிறுவனத்தின் ஆராய்ச்சிக் கூடம் பங்களூரூவில் இருக்கிறது என்பதை அறிந்தேன்...

பிரச்சனை, இந்திய அரசின், தாராளமயமாக்கல் கொள்கையினால் பல நிறுவனங்கள் இந்தியாவிற்குள் வந்தன. ஆனால் சீன நிறுவனங்களை specific ஆக இந்திய அரசு அனுமதி மறுத்துள்ளது, பாதுகாப்பு கருதி. மேலும் இந்த ஹுவே நிறுவனம் Peoples liberation army யின் ex- officer ஒருவரால் ஆரம்பிக்கப் பட்டது.

இதே போல், அமேரிக்கா, ஜப்பானிலும் இன் நிறுவனத்திற்கு level playing field வழங்கப் படவில்லை. நாம் மட்டும் என்ன வித்தியாசமாக இருக்கவேண்டுமா?

லொடுக்கு said...

//அமேரிக்காவில் ஒரு வரை நீங்கள் கம்யூனிஸ்ட் என்று சொல்வது மிகவும் கேவலமாகத் திட்டுவதாகும். அப்படி சொல்லப் பட்டவருடன் யாரும் வியாபாரம் கூட செய்ய மாட்டார்களாம்...!!//

அமெரிக்கா செஞ்சா சரியாத்தான் இருக்கும். அவர்களின் vocabulary தான் உலகப் புகழ் பெற்றதாச்சே!!