நக்ஸலைட்டுகள் தங்கள் கொள்கையை வலைப்பதிவேற்றி வலையில் பிரச்சாரம் செய்கின்ற அளவுக்குப் போய்விட்டார்கள்.
நக்சலைட்டுகளுடன் கூட்டுச் சேர்ந்து இந்தியாவின் வளர்ச்சியைத் தடுக்க மாவோயிச புரட்சி செய்ய ஆசையிருந்தால் இதோ இந்த வலைத்தளத்திற்குச் செல்லவும். செல்பவர்கள் மீண்டும் இங்கே வரவேண்டாம். நக்சலைட்டுகளின் ஆதரவாளன் என்றால் என் அகராதியில் தலை நசுக்கப் படவேண்டிய நச்சுப் பாம்பு என்றே பொருள்.
போலீசாராலோ அல்லது அனானியாகவோ இயக்கப் படும் இந்த தளம் நக்ஸல் எதிரி தளம்.
இந்த நக்ஸல்வாத இயக்கத்தின் எதிரி தளத்தில் ASHA மற்றும் AID இந்தியா வை குறிவைத்தும் ஒரு சுட்டி இருக்கிறது. IIT ன் முன்னாள் மாணவரான திரு. சந்தீப் பாண்டே படம் போட்டு நக்ஸலைட்டுகளுக்கு உதவுபவர் என்றும் கூறியிருக்கிறார்கள்.

தமிழகத்தில் சூனாமியின் போது இது போல் AID மற்றும் ASHA போன்ற (NGO) எஞ்சி ஓ (எஞ்சியிருக்கும் ஒற்றர்களோ!?) க்களுக்கு பண உதவி செய்திருப்பின் அது நிச்சயம் நக்சலைட்டுகளுக்குச் சென்றிருக்கும் என்பது இவர்களது கூற்று.