Saturday, November 11, 2006

போலிகளிடமிருந்து இடது சாரிகளைக் காப்பாற்றுங்கள்

திண்ணையில் திரு. அருணகிரி எழுதிய இந்த கட்டுரை மிகவும் ஆழமான எண்ணத்தை தூண்டிவிட்டதால் இதனை இங்கே பதிகிறேன்.

இடது சாரி இந்துத்வம்

இதுவரை இந்துத்வா கொள்கை என்பது ஏதோ ஒரு அரசியல் கொள்கை அவ்வளவே என்ற எண்ணத்தில் இருந்தேன். ஆனால் அருணகிரியின் இந்த கட்டுரையின் அர்த்தத்தை நான் சரியாகப் புரிந்து கொண்டுள்ளேன் என்றால் உண்மையான இடது சாரிகள் இடது சாரிகள் என்று தங்களை அடையாளப் படுத்திக் கொள்பவர்களில் இல்லாமல் போய்க் கொண்டிருப்பதாகவே தோன்ற அரம்பித்துவிட்டது.

இடது சாரிகள் என்றாலே கேவலமான ஜந்துக்கள் என்று தான் நினைத்திருந்தேன். ஆனால் அந்த எண்ணம் மாறிவருகிறது. இவர்கள் உண்மையான இடது சாரிகள் அல்லர். சும்மா பதவிக்காக வேஷம் போடும் வெளிவேசக்காரர்கள் என்ற எண்ணம் தோன்ற அரம்பித்துவிட்டது.

உண்மையான இடது சாரிகள் இடது சாரி சிந்தனையை காக்கவேண்டும் என்ற அவசியத்தை திரு. அருணகிரி சொல்லியிருக்கிறார்.


உண்மையான இடதுசாரித்தனத்தை இடதுசாரிகளிடமிருந்து காப்பதும் மீட்பதும் இந்துத்துவத்தின் இன்றைய தலையாய கடமையாகும்.


இந்த நிலைக்கு இந்திய இடது சாரிச் சிந்தனையாளர்கள் செல்ல என்ன காரணம் என்பதை எல்லோரும் அறிவர். இந்த இடது சாரி சிந்தனையை இந்துத்வா சிந்தனையாளர்கள் மீட்பதில் வெற்றியடைந்தாலொழிய போலி இடது சாரிகளுக்கு இன்று இருக்கும் Political space மற்றும் அரசியல் செல்வாக்கை காலி செய்ய முடியாது என்றே தோன்றுகிறது.

5 comments:

dondu(#11168674346665545885) said...

This post has been removed by the author.

அப்படியானால் கமெண்ட் இடுவது மட்டும் எப்படி எனேபிள் செய்யப்பட்டுள்ளது? அல்லது இந்தக் காண்டக்ஸ்டில் போஸ்ட் என்பது பின்னூட்டத்தைத்தான் குறிக்கிறதா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

வஜ்ரா said...

அது கமெண்டைத்தான் குறிக்கிறது டோண்டு அவர்களே.

Amar said...

//இன்று இந்தியாவில் இடதுசாரித்தனம் என்றால் இந்துமத எதிர்ப்பு என்றும், முஸ்லீம்/கிறித்துவ ஆதரவு என்றும், நாட்டுப்பற்றை நகையாடுவது என்றும், பாரத தொன்மைக்கலாசாரக் கூறுகளைத் தாழ்மைப்படுத்துவது என்றும் ஆகிவிட்ட ஒரு கேடு கெட்ட கயமைத்தனம் மாற வேண்டும்//

இதை படிக்கும் கம்மி திம்மிகளுக்கு செருப்பில் அடித்ததை போல இருந்திருக்க வேண்டும்... :)

வஜ்ரா said...

//
இதை படிக்கும் கம்மி திம்மிகளுக்கு செருப்பில் அடித்ததை போல இருந்திருக்க வேண்டும்... :)
//

எறுமை மாட்டின் மேல் மழை பெய்தது போலாவது இருக்குமா என்பதே சந்தேகம். !

enRenRum-anbudan.BALA said...

////இன்று இந்தியாவில் இடதுசாரித்தனம் என்றால் இந்துமத எதிர்ப்பு என்றும், முஸ்லீம்/கிறித்துவ ஆதரவு என்றும், நாட்டுப்பற்றை நகையாடுவது என்றும், பாரத தொன்மைக்கலாசாரக் கூறுகளைத் தாழ்மைப்படுத்துவது என்றும் ஆகிவிட்ட ஒரு கேடு கெட்ட கயமைத்தனம் மாற வேண்டும்//

This is the essence and summarizes effectively all that is required to be told