இந்துஸ்தான் டைம்ஸில் வந்த இந்தச் செய்தியில் நக்ஸலைட்டுகள் வலைப்பதிவில் காலூன்றியதால் நக்சலைட்டுகளை ஒடுக்க அமைக்கப் பட்டப் போலீசாரும் வலைப்பதிவு ஒன்றை ஆரம்பித்து internet ல் போர் செய்கிறார்களாம்.
நக்ஸலைட்டுகள் தங்கள் கொள்கையை வலைப்பதிவேற்றி வலையில் பிரச்சாரம் செய்கின்ற அளவுக்குப் போய்விட்டார்கள்.
நக்சலைட்டுகளுடன் கூட்டுச் சேர்ந்து இந்தியாவின் வளர்ச்சியைத் தடுக்க மாவோயிச புரட்சி செய்ய ஆசையிருந்தால் இதோ இந்த வலைத்தளத்திற்குச் செல்லவும். செல்பவர்கள் மீண்டும் இங்கே வரவேண்டாம். நக்சலைட்டுகளின் ஆதரவாளன் என்றால் என் அகராதியில் தலை நசுக்கப் படவேண்டிய நச்சுப் பாம்பு என்றே பொருள்.
போலீசாராலோ அல்லது அனானியாகவோ இயக்கப் படும் இந்த தளம் நக்ஸல் எதிரி தளம்.
இந்த நக்ஸல்வாத இயக்கத்தின் எதிரி தளத்தில் ASHA மற்றும் AID இந்தியா வை குறிவைத்தும் ஒரு சுட்டி இருக்கிறது. IIT ன் முன்னாள் மாணவரான திரு. சந்தீப் பாண்டே படம் போட்டு நக்ஸலைட்டுகளுக்கு உதவுபவர் என்றும் கூறியிருக்கிறார்கள்.
தமிழகத்தில் சூனாமியின் போது இது போல் AID மற்றும் ASHA போன்ற (NGO) எஞ்சி ஓ (எஞ்சியிருக்கும் ஒற்றர்களோ!?) க்களுக்கு பண உதவி செய்திருப்பின் அது நிச்சயம் நக்சலைட்டுகளுக்குச் சென்றிருக்கும் என்பது இவர்களது கூற்று.
Saturday, November 25, 2006
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
test
//இதோ இந்த வலைத்தளத்திற்குச் செல்லவும். செல்பவர்கள் மீண்டும் இங்கே வரவேண்டாம//
வஜ்ரா,
மேலே உள்ள வரிகளுக்கான சரியான அர்த்தம் புரியவில்லை எனக்கு நக்ஸலைட்டுகளின் பதிவுக்கு செல்பவர்கள் எல்லாம் நக்ஸலைட்டுகளின் ஆதரவாளர்கள் அப்படின்னு சொல்ல முடியாது இல்ல. அவர்களின் கருத்துக்கள் என்ன என்று அறிந்து கொள்வதிலும் தவறு இல்ல என்பது என்னுடைய கருத்து (இதைத்தானே நீங்க சொல்ல வந்தீங்க?)
//
நக்சலைட்டுகளுடன் கூட்டுச் சேர்ந்து இந்தியாவின் வளர்ச்சியைத் தடுக்க மாவோயிச புரட்சி செய்ய ஆசையிருந்தால் இதோ இந்த வலைத்தளத்திற்குச் செல்லவும்.
//
இதுவே முழு வரி. இப்படி ஆசை இருப்பவர்கள் சென்றாலும் செல்லாவிடிலும் என்னைப் பொருத்தவரையில் துரோகிகள். அவர்களுக்கு என் வலைப்பூவில் வரவேற்பு இல்லை.
//
அவர்களின் கருத்துக்கள் என்ன என்று அறிந்து கொள்வதிலும் தவறு இல்ல என்பது என்னுடைய கருத்து
//
தெரிந்துக் கொள்ளத்தான் வலைத்தளத்தின் முகவரி கொடுத்துள்ளேன்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சந்தோஷ் அவர்களே.
Post a Comment