Monday, October 02, 2006

தலீத் தன்னிறைவு

உ.பி மானிலம், பராபங்கி என்னும் இடத்தில் தலீத்கள் மேல் சாதி பிராமணர்கள் தொந்தரவு தாங்காமல் அவர்களிடமிருந்து விலகி தாங்கள் முக்கிய சடங்குகளான திருமணம் திதி போன்றவற்றை தங்களுள் படித்தவர்களைவைத்து முடித்துக் கொண்டு விடுகின்றனர் என்று ஹிந்துஸ்தான் டைம்ஸில் செய்தி வெளியாகியிருக்கிறது.


In dozens of villages across the state, Dalits have stopped depending on Brahmin priests for weddings, funerals and other ceremonies. Instead, they have turned to a Buddhism-inspired book which has rituals that can be performed by any literate person. The wide use of the Bhim Patra, named after Bhimrao Ambedkar, is part of a quiet rebellion against upper-caste domination.

"We have nothing to do with the Brahmin pandits," said Chhabi Lal of Ghunghter village, 45 km from Lucknow. "They tell us, 'Your parents died; so to make their souls happy, give us a bed and a cow as gifts.' As if it is all going to reach them."


பிராமணர்களிடம் சாஸ்திர சம்பிரதாயம் கடைபிடித்து திருமணம், சடங்குகள் செய்வதைவிடுத்து அம்பேத்கார் ஆரம்பித்து வைத்த பீம்-பத்ர எனப்படும் புத்தகத்தில் கூறியபடி திருமணங்கள் நடத்திக் கொள்கின்றனர். இன்னும், அங்கே இருக்கும் பிராமணர்கள் திருந்தாமல் செய்தியில் சொல்லியிருப்பது போல் மூடத்தனமாக "உங்கப்பன் செத்துட்டான், எனக்கு மாடு குடு, ஆடு குடு" என்று கேட்டுக் கொண்டிருப்பதனால் தான் இந்த நிலை.




"We are all Hindus; we have not converted," said Mohan Lal Gautam, who sells books at a traffic intersection at Hazratgunj in Lucknow. "But we have stopped following the old rituals. We follow the Bhim Patra. There is no pandit, no worship of gods and goddesses, no dowry and no auspicious time for any wedding."

Amar Pal Bharti of Jyotiba Phule Nagar district said: "This is the result of our anger against the system. What do we have to do with the gods? Why worship someone we have not seen?"

Priests are feeling the heat. "Dalits have mostly stopped coming to us. They conduct their own ceremonies," said Jagdamba Prasad Bajpai, a priest at Deora village, Lucknow.


இதில் சந்தோஷமான விஷயம் என்னவென்றால், தலீத்கள் ஒரு சாதி வெறி பிடித்த பிராமணன் இருந்த இடத்தை வெளி நாட்டு மூளைச் சலவை செய்யப்பட்ட உள் நாட்டு மதப் போதகர்களை அமர்த்தி, கிருத்தவம், இஸ்லாம் என்று மத்திய கிழக்கு மதத்துக்குத் தாவாமல், இந்துவாகவே இருந்து சாதிக்கின்றனர் என்பது தான்.

13 comments:

dondu(#11168674346665545885) said...

இது, இது, இதைத்தான் நானும் கூறிவருகிறேன். அவமானத்தை பொறுத்துக் கொள்ளவே கூடாது. ஆகவேதான் இரட்டை தம்ளர் கிளாஸ் முறை இருக்கும் டீக்கடைகளில் துட்டு கொடுத்து அவமானமும் படாதீர்கள் என்று கூறினேன். நீங்களே டீக்கடை வைத்துக் கொள்ளுங்கள் என்றும் கூறிப் பார்த்தேன்.

அது அரசுதான் எல்லாம் செய்ய வேண்டும் என்று வெத்தாக குண்டுச்சட்டியில் குதிரை ஓட்டும் இங்கிருக்கும் ராஜ வனஜர்களுக்கு தமாஷாக இருக்கிறது. என்ன செய்வது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

வஜ்ரா said...

வாங்க டோண்டு சார்,

மதம் மாறினால், கேவலம் மதம் மாறியவன் என்ற எண்ணம் தான் இருக்கும்...

இப்படி உள்ளிருந்தே ஆப்பு வைத்தால் தான் அதன் வலி தெரியும்...அதைச் செய்வது தான் சிறப்பு.

நீங்கள் கூறிய ரெட்டை தம்ளர் முறையில் இருக்கு டீக்கடைக்கு பதில் தனி டீக்கடை வைப்பது போலத் தான் இதுவும்.

அரசு வந்து டீ க்கடை வைத்து தலீத் ஜாதிச் சான்றிதள் காட்டினால் டீ இலவசம் என்று சொல்லவேண்டும் என்று நினைப்பது சோம்பேறிகளின் வாதம். அது தான் மதம் மாறுவதற்கு முதல் படி. அரசும் செய்யவில்லை, தம் மதத்திலும் நாதியில்லை என்றானவுடன் அந்த Spiritual vaccum ஐ ஏசு, அல்லா கொண்டு நிரப்புவர். தொன்று தொட்டு நடக்கும் டெக்னிக் தானே இது...இதற்கு மற்றொரு மத்திய கிழக்கு மதமான கடவுள் மறுப்பாளர்களும் உடந்தையாக இருப்பது தெரிந்ததே.

Amar said...

நல்ல முயற்ச்சி.
பாராட்ட வேண்டும் இவர்களை.

வஜ்ரா said...

சமுத்ரா,



உண்மையாகவே பாராட்டப் படவேண்டியவர்களே...



இது ஒரு நல்ல உதாரணம். இந்த model ஐ மற்ற இந்திய கிராமங்களுக்கும் ரிப்பீட் செய்தால் பல பிரச்சனைகளுக்கு முடிவு வரும்...



பாப்பாபட்டி, கீரிப்பட்டி பிரச்சனைகளும் இதில் அடக்கம்.

Unknown said...

இதெல்லாம் பல ஆயிரம் வருஷத்துக்கு முந்தியே செஞ்சிருந்தா தலித்துகள் எப்பவோ விடுதலை அடைந்திருப்பார்கள்.

Better be late than never

வஜ்ரா said...

வாய்ச்சொல் வீரரே,

நீங்கள் சஸ்பென்ஸ் எல்லாம் கொடுத்தீர்கள்...ஆனால் இந்த statcounter வைத்து எங்கிருந்து வந்தது என்று பார்த்ததில் ஒரு யூகம் உள்ளது...அதை சரி பார்த்துக் கொள்ள தனி மெயில் அனுப்பவும்...

உங்கள் profile ல் மெயில் முகவரி தெரியவில்லை.

Hariharan # 03985177737685368452 said...

மிகச்சரியான தீர்வு. ஒரு பழக்கம் தற்போதய காலத்துக்கு ஒத்துவரவில்லை எனில் அதை ஒதுக்குவதே சரி!

இந்து மதம் விட்டு மாறாமல் பழக்கத்தை மாற்றிச் சரிசெய்து தீர்வு கண்ட இவர்கள் பாராட்டுக்கு உரியவர்கள்.

ரவி said...

உள்குத்து... வேறென்ன சொல்ல :))

வஜ்ரா said...

//
உள்குத்து... வேறென்ன சொல்ல :))
//

இதுல என்ன தலவரே உள் குத்து.., வெளி குத்து, கும்மாங்குத்துன்னு இருக்கு? எனக்கு வெளங்கலியே?

Muse (# 01429798200730556938) said...

கடவுள் கண் திறந்தார்.

நல்ல முயற்சி. இப்போதாவது ஆரம்பித்தார்களே.

கடவுளை உண்டியலுக்குப் பின்னால் நிறுத்தும் பூஜாரிகளுக்கு இது ஒரு நல்ல பாடமாக இருக்கட்டும்.

பணத்திற்காக பரமனை வழிபடுபவர்களைவிட, பாமரரின் குரலை கடவுள் மதிப்பார். தலித் பூஜாரிகளின் குரல், பார்ப்பன பூஜாரிகளின் ஆரவாரத்தை மிஞ்சி இறைவனுக்குக் கேட்கும்.

இந்த முயற்சிக்கு வெற்றி உண்டாகட்டும் !!

Amar said...

//இதெல்லாம் பல ஆயிரம் வருஷத்துக்கு முந்தியே செஞ்சிருந்தா தலித்துகள் எப்பவோ விடுதலை அடைந்திருப்பார்கள்.
//

செல்வன் சொல்வது உன்மை.

இப்பொது இப்படி அதிகம் நடக்கவேண்டியதை தடுப்பது எதுவென்றால் social justice என்பதை social vengeance ஆக சிலர் மாற்றிவிடுவது தான்.

தாழ்த்தபட்டவர்களுக்கும் "மேல் சாதியினருக்கு" தீரா பகையை ஏற்படுத்தி அதில் குளிர்காய நினைப்பவர்கள் தான் இன்றைக்கு social justiceகிடைக்க மிக பெரிய தடையாக இருப்பவர்கள்.

சீனு said...

உண்மையிலேயே இது வரவேற்கப்படவேண்டிய ஒன்று. இதனை மேலும் விளம்பரப்படுத்த வேண்டும். அப்பொழுதாவது சாதி ஆதிக்க சக்திகளுக்கு உறைக்குதா என்று பார்க்க வேண்டும்.
Thanx for sharing this.

வஜ்ரா said...

//
தடுப்பது எதுவென்றால் social justice என்பதை social vengeance ஆக சிலர் மாற்றிவிடுவது தான்.

தாழ்த்தபட்டவர்களுக்கும் "மேல் சாதியினருக்கு" தீரா பகையை ஏற்படுத்தி அதில் குளிர்காய நினைப்பவர்கள் தான் இன்றைக்கு social justiceகிடைக்க மிக பெரிய தடையாக இருப்பவர்கள்.
//

அதைச் செய்யக் காரணம் உள்ளது. குளிர் காய்வது மட்டுமில்லமல், இன்று வோட்டுப் பிச்சை அரசியலின் முக்கியமான corner stone இது தான். தலீத்துகள் தலீத்துகளாக இருந்தால் தான் இவர்கள் பப்பு வேகும்.

வெள்ளையன் விட்டுச் சென்ற மிச்ச நரிகளின் (அத்தாம்பா, missionary) மத மாற்று வேலைக்கு இது மிகவும் முக்கியம். முதலில் Anti- upper caste, அடுத்து Anti-brahmin, அடுத்த கட்ட நடவடிக்கை Anti-hindu, அடுத்து மதம் மாறுதல்..